இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 5 படகுகளுடன் 23 இந்திய மீனர்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Image result for இந்திய மீனவர்கள்  virakesari

கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள 23 மீனவர்களையும் யாழ். கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் இராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.