குஜராத் தேர்­தலில் எங்கள் பெயரை பயன்­ப­டுத்­து­வதை நிறுத்த வேண்டும் என்று பிர­தமர் மோடி­யிடம் பாகிஸ்தான் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

குஜராத் சட்­ட­மன்ற தேர்­தலில் பாகிஸ்தான் தலை­யி­டு­வ­தாக பிர­தமர் மோடி குற்­றம்­சாட்டி இருந்த நிலையில்,  தேர்தல் விவா­தங்­களில் எங்கள் நாட்டு பெயரை இழுப்­பதை இந்­தியா நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் தெரி­வித்­துள்­ளது. பாகிஸ்தான் வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­ச­கத்தின் செய்தி தொடர்­பாளர் முஹம்­மது பைசல், தனது டுவிட்டர் பக்­கத்தில் கூறி­யி­ருப்­ப­தா­வது:- “ சதித்­திட்­டங்கள் மூலம் வெற்றி பெறு­வதை விட உங்கள் சொந்த பலத்தில் வெற்றி பெறுங்கள். தேர்தல் விவா­தங்­களில் பாகிஸ்தான் பெயரை இழுப்­பதை இந்­தியா நிறுத்த வேண்டும். பாகிஸ்தான் தலை­யீடு உள்­ள­தாக வெளி­யாகும் தகவல் அடிப்­படை ஆதா­ர­மற்­றது என்று தெரி­வித்­துள்ளார். 

பாகிஸ்­தானின் இந்த குற்­றச்­சாட்­டுக்கு பதி­லடி கொடுத்­துள்ள இந்­தியா,  தேர்­தலில் சொந்த பலத்தில் போட்­டி­யிடும் திறன் இந்­தி­யர்­க­ளுக்கு உள்­ள­தா­கவும், அறி­வுரை கூறு­வதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் எனவும் தெரி­வித்­துள்­ளது.