நுவரெலியா - பொரலந்த பகுதியில் 150 கிலோ மரை இறைச்சியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு 50,000 ஐம்பதாயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறு  நுவரெலியா நீதிமன்ற நீதவான் ருவான் இந்திக்க டீ சில்வா உத்தரவிட்டார்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய  தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 150 கிலோ மரை இறைச்சியை மீட்டுள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் நுவரெலியா பொரலந்த பீட்ரூ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய  சுப்பையா கணேஷ்  என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.