வாள்களைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியவர்களில் மேலும் ஒருவர் கைது

Published By: Priyatharshan

11 Dec, 2017 | 03:15 PM
image

யாழில் வாள்களுடன் மக்களை அச்சுறுத்தி, கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் தெல்லிப்பழை பொலிஸார் இன்று காலை மேலும் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சங்கானை வைத்தியசாலைக்கும் தொட்டிலடிச் சந்திக்கும் இடையே இரு மோட்டார் சைக்கிளில் வந்த ஐவர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 5 மணியளவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளனர்.

குறித்த கும்பல், வாள்களை காட்டி மக்களை அச்சுறுத்தியதுடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு, மக்களுடன் அநாகரிகமாக நடந்துகொண்ட நிலையில் பெண்ணொருவரின் சங்கிலியையும் அறுத்துச்சென்றுள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபர்கள் தொடர்பில் பொதுமக்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸாருடன் இணைந்து தெல்லிப்பழைப் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், 3 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து வாள் மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு பைப்புகள் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

இதையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் ஒருவர் இன்று தெல்லிப்பழையில் கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர்  27 வயதுடையவர்களெனவும் மற்றைய இருவரும் 24 மற்றும் 21 வயதுடையவர்கள் எனவும் நால்வரும் அளவெட்டியைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21