பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் கோரிக்கை.!

Published By: Robert

11 Dec, 2017 | 02:45 PM
image

ரயில்வே சேவையாளர்களின் வேலை நிறுத்தத்தால் ரயில் சேவைகள் முடங்கிப் போயுள்ள நிலையில், ரயில்களில் பயணிக்கும் மாணவர்கள் மாற்று போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும்படி கல்வி அமைச்சர் கோரியுள்ளார்.

இதேவேளை, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை நேரத்துடன் அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரயில்வே தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதாக ரயில் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று முற்பகல் இடம்பெற்ற ரயில்வே தொழிற்சங்கங்களின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவிற்கும், ரயில்வே தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நேற்று இரண்டாவது தடவையாக இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளது.

இதன்போது ரயில்வே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு முறையான தீர்வுகள் கிடைக்கவில்லையென தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இன்று 5 ஆவது நாளாகவும் ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37