நீண்ட கால வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி அடிப்படையிலான கொள்கை ஆகியவற்றை படல்கமயைச் சேர்ந்த ஆடைகள் உற்பத்தி நிறுவனமான Sirio லிமிட்டெட் பின்பற்றி வருகின்றமைக்காக சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலைபேறாண்மை விருதுகள் 2017 இல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

நவம்பர் 28 ஆம் திகதி இந்நிகழ்வு நடைபெற்றதுடன், இதனை இலங்கையின் முன்னணி வியாபார சம்மேளனமான இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.

தொடர்ச்சியாக 14 ஆவது ஆண்டாக இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சகுனுமா கலந்து கொண்டதுடன் பிரதான உரையை புகழ்பெற்ற கூட்டாண்மை நிலைபேறாண்மை நிபுணரான டேவிட் பென்ட் நிகழ்த்தியிருந்தார்.

Sirio லிமிட்டெட் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான ஃபீலிக்ஸ் ஏ. பெர்னான்டோ கருத்துத்தெரிவிக்கையில்,

“இலங்கையின் கூட்டாண்மை நிலைபேறாண்மை செயற்பாடுகளில் சிறந்த செயற்பாட்டாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். 

குறிப்பாக நிறுவனத்தின் நிதிசார் பெறுபேறுகளையும் வளரச்சியையும் பதிவு செய்தமைக்காக பெற்றிருந்தோம். இது உண்மையில் பெருமைக்குரிய விடயம் என்பதுடன், எதிர்காலத்தில் இது போன்றன பெறுபேறுகளை எம்மால் எய்தக்கூடியதாக இருக்குமென கருதுகிறோம்” என்றார்.

இத்தாலியின் Calzedonia S.p.A நிறுவனத்தின் கீழ் Sirio லிமிட்டெட் இயங்குவதுடன் உள்நாட்டில் இயங்கும் பல ஆடைத்தொழிற்சாலைகளில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. பெண்களுக்கான உள்ளாடைகள், ஸ்டொக்கிங்கள், இரவு ஆடைகள், காலுறைகள் மற்றும் நீச்சல் ஆடைகள் உற்பத்தியில் Calzedonia S.p.A ஈடுபட்டுள்ளது. உள்நாட்டில் காணப்படும் ஏனைய நிறுவனங்களில் ஒமெகா லைன் லிமிட்டெட், அல்ஃபா அப்பரல்ஸ் லிமிட்டெட், பென்ஜி லிமிட்டெட் மற்றும் வவுனியா அப்பரல்ஸ் போன்றன அடங்கியுள்ளன. இவற்றில் மொத்தமாக 12000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 40 க்கும் அதிகமான நாடுகளில் 4200 க்கும் அதிகமான விற்பனை நிறுவனங்களை CalzedoniaS.p.A கொண்டுள்ளது.

ஐரோப்பா, ரஷ்யா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த நிலையங்கள் காணப்படுகின்றன. Intimissimi, Calzedonia, Tezenis மற்றும் Falconeri எனும் நாமங்களில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.

2017 சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலைபேறாண்மை விருது, சிறந்த பத்து கூட்டாண்மை நிறுவனங்கள், பிரிவுகளுக்கான விருதுகள், துறைசார் விருதுகள் போன்றன இந்த நிகழ்வில் வழங்கப்பட்டிருந்தன.