உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இந்­திய வெளி­வி­வகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று பகல் இலங்கையை வந்தடைந்தார். 

இன்று பகல் 12.30 மணியளவில் அவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜின் இலங்கை விஜயத்தில் மேலும் 14 இந்திய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். 

இலங்கை - இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள அவர், ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் உயர் மட்­டத்­தி­னரை இந்­திய வெளி­யு­றவு அமைச்சர் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார். 

அத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­திக்க­வுள்ளார்.