ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம்.சல்மான் தனது உறுப்­பினர் பத­வியை இன்று இரா­ஜி­னாமா செய்­ய­வுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தேசியப் பட்­டியல் உறுப்­பினர் பத­வியை சுழற்சி முறையில் மற்­றொ­ரு­வ­ருக்கு வழங்கும் தீர்­மா­னத்­துக்கு அமை­வா­கவே எம்.எச்.எம்.சல்மான் தனது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வுள்              ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் இரு தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க ளில் ஒரு­வ­ரான ஏ.ஆர்.எம். ஹாபிஸ் ஏற்­க­னவே தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­த­தை­ய­டுத்து அவ­ரது இடத்­துக்கு எம்.எஸ்.தௌபீக் நிய­மிக்­கப்­பட்டார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­வதால் நிலவும் வெற்­றி­டத்­துக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.