DHL Express  இன் ஆசிய பசுபிக் செயற்பாடுகளுக்கான தலைமை நிர்வாக அதிகாரியாக கென் லீ நியமனம்

By Priyatharshan

05 Feb, 2016 | 05:50 PM
image

உலகின் முன்னணி சர்வதேச அதிவேக சேவை வழங்குநரான DHL Express, ஆசிய பசுபிக் பிராந்திய செயற்பாடுகளுக்கான தலைமை நிர்வாக அதிகாரியாக கென் லீ நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் DHL Express உடன் இணைந்து வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்ட திரு.ஜெரி ட்சூ ஓய்வு பெற்றுச் சென்றதை தொடர்ந்து இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரத்தில் சீனா தொடர்ந்தும் முக்கிய அங்கமாக இருப்பதையிட்டு, சீனாவின் தலைமை நிர்வாக அதிகாரியான வூ டொங்மிங் உடன் DHL Express இற்கான தனித்த பிராந்தியமாக இது காணப்படுகிறது. லீ மற்றும் வூ ஆகிய இருவருமே DHL Express உலக மேலாண்மை வாரியத்தில் இணைந்து கொண்டுள்ளனர். 

DHL Express நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கென் எலென் கருத்து தெரிவிக்கையில், “பிராந்தியத்தின் பொருளாதாரம் தொடர்ந்து தங்கள் போக்குகளில் சீராக இயங்குவதனால், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் வளர்ச்சியை நீடித்தல் மற்றும் ஒன்றுதிரட்டல் என்பது DHL இற்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. 

ஆசிய பசுபிக் பிராந்தியம் மிகவும் முதிர்ச்சி வாய்ந்த பொருளாதார அபிவிருத்தி கட்டத்தில் கால்தடம் பதித்துள்ள நிலையில், ஆசிய நாடுகள் மற்றும் தொழிற்துறைகளில் ஈடிணையற்ற மூலோபாய நோக்குடன் இணைந்த மகத்தான முதிர்ச்சியான சந்தை வர்த்தக வளர்ச்சியை ஈட்டியுள்ள கென்னிற்கு, DHL Express’ இன் சந்தை தலைமைத்துவத்தை பேண மற்றும் விஸ்தரிப்பதற்கான தகுதியை வழங்கியுள்ளது. மக்கள் மற்றும் தொழிற்துறை தொடர்பான ஆழமான புரிதலை கொண்டுள்ள கென் மற்றும் டொங்மின் ஆகியோர் எமது உலகளாவிய தலைமைத்துவ குழுவின் வலிமைமிக்க புதிய இணைப்பாக உள்ளனர்” என்றார்.

DHL express ஹொங்கொங் மற்றும் மக்கா கிளையின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளரும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் வர்த்தகப் பிரிவின் முன்னாள் நிறைவேற்று உப அதிபருமான கென் லீ, கடந்த 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இருநாடுகளுக்கிடையே வருவாயை இரட்டிப்படையச் செய்வதற்கான பொறுப்பாளராக செயற்பட்டுள்ளார். 

DHL Express ஆசிய பசுபிக் மேலாண்மை வாரியத்தின் அங்கத்தவரான லீ, நிறுவனத்தின் கடுகதி போக்குவரத்தில் 20% வீதத்திற்கும் மேலான சேவையை பயன்படுத்தி வரும் சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் ஆகிய பிராந்தியங்களின் மிக முக்கிய மையங்களில் DHL இன் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பினையும் கொண்டிருந்தார்.

இந்த காலப்பகுதிகளில் விநியோகம், வாடிக்கையாளர் சேவை, வர்த்தக முத்திரையிடல் மற்றும் பெருநிறுவன சமூக பொறுப்பு துறைகளில் பல்வேறு விருதுகளை வெற்றியீட்டுவதற்காக DHL இனை லீ வழிநடத்தியிருந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டில் DHL இன் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் வர்த்தக செயற்பாடுகளை லீ பொறுப்பேற்ற பின்னர், DHL இன் சந்தை ஸ்தானத்தை வலுப்படுத்தக்கூடிய புதிய மற்றும் உயர் இலாபத்தை தரக்கூடிய வர்த்தக மூலோபாயங்களை முன்னெடுத்திருந்தார்.

“அதிகரித்துச் செல்லும் சந்தை சீர்குலைவுகளுக்கு மத்தியில் சரக்கியல் துறையின் முன்னோடி எனும் ரீதியில் DHL Express ஆனது அதன் வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் சரக்கியல் நெகிழ்ச்சித்தன்மை தொடர்பில் சந்தையில் தொடர்ச்சியாக புதுமைகளை உட்புகுத்துவதற்கான தேவை நிலவுகிறது” என லீ தெரிவித்தார். 

DHL  நிறுவனத்துடன் 18 வருடகாலமும், சரக்கியல் துறையில் 20 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தையும் லீ கொண்டுள்ளார். இவர் எட்டிய முக்கிய சாதனைகளுள், DHL சிங்கப்பூர் நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளராகவும், பொது முகாமையாளராகவும் லீ பதவி வகித்த காலத்தில் அவரால் முன்னெடுக்கப்பட்ட வர்த்தக மாற்றங்கள் 2001ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தரநிலைச் சான்றிதழை பெற்றுக்கொள்ள வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டில் DHL ஹொங்கொங்கின்; மத்திய ஆசிய மையத்தின் (CAH)பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட லீ, புதுமையான தன்னியக்க வகைப்படுத்தும் முறைமை உள்ளடங்கலாக இசைவான செயல்பாட்டு விரிவாக்க முயற்சிகளை ஒருங்கிணைத்திருந்தார்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லீ, செயற்றிறன் மிக்க செயற்பாடுகள், சேவை புத்தாக்கங்கள், பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் மீது அதிக முதலீடுகள் ஆகியவை தொடர்பில் கவனம் செலுத்தி பிராந்தியம் முழுவதும் DHL இன் சந்தை தலைமைத்துவத்தை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளார். ஹொங்கொங் நகரை மையமாகக் கொண்டு, ஹொங்கொங், இந்தியா, ஜப்பான், கொரியா, ஓஷனியா, தெற்காசியா, தென்கிழக்காசியா மற்றும் தாய்வான் உள்ளடங்கிய நாடுகளுக்கான பொறுப்பாளராகவும் இவர் கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right