தலவாக்கலை - ஹேமசந்திரா மாவத்தையில் இன்று மாலை 4 மணியளவில் இடம் பெற்ற வேன் விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கொட்டக்கலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹேமசந்திர மாவத்தையிலிருந்து தலவாக்கலை நகர் நேர்ககி வந்த வாகனம்  வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்திலிருந்த வீடொன்றின் முற்றத்தின் மீது விழுந்தே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரனைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.