நாட்டில், கடந்த ஓராண்டு காலப் பகுதியில் மட்டும் ஒரு இலட்சத்து 76,248 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில், மேல் மாகாணத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் அது 42.93 சதவீதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 8 ஆயிரத்து 340 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.