அனைத்து பொலிஸ் அதிகாரிகளினது இடமாற்றங்களையும்  தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பணிப்புரை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளமையினாலேயே குறித்த இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கை சிரேஷ்ட உப பொலிஸ் மா அதிபர்கள், உப பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் அதிகாரிகள், உதவிப் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பரிசோதகர்களுக்கும் பொலிஸ் மா அதிபரினால் அனுப்பப்பட்டுள்ளது.

மேற்படி உத்தரவு கடந்த எட்டாம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அதற்கிணங்க வருடாந்த இடமாற்றம் உட்பட சகல இடமாற்றங்களும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.