பெருமளவு வெளிநாட்டு நாணயத் தாள்களை வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு செல்ல முயன்ற சீனப் பிரஜை ஒருவரை சுங்கத் துறையினர் இன்று தடுத்து வைத்தனர்.

25 வயது நிறைந்த இந்தப் பிரயாணி சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடாகியிருந்தது.

எனினும் அவரது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் சிங்கப்பூர் டொலர்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கை மதிப்பில் இதன் பெறுமதி சுமார் ஒரு கோடியே பதினைந்து இலட்ச ரூபாவாகும்.