ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படுவதால், உடனடியாக சேவைக்குத் திரும்பாத ரயில்வே ஊழியர்கள் தத்தமது பதவிகளை இராஜினாமா செய்தவர்களாகக் கருதப்படுவர் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் கடந்த மூன்று தினங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதையடுத்து, ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி பத்திரத்தில் ஜனாதிபதி நேற்று (8) இரவு கைச்சாத்திட்டார்.

இந்த வர்த்தமானிப் பத்திரம் தமக்குக் கிடைத்திருப்பதாகவும் இன்று அவை அச்சிட்டு வெளியிடப்படும் என்றும் அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கைகளால் வேலை நிறுத்தம் கைவிடப்படலாம் என்று நம்பப்படுகிறது.