அவுஸ்திரேலியாவில் 17 வயது சிறுமியுடன் உறவு கொண்ட பெண் வைத்தியர், இந்த விவகாரம் வெளியில் தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் கணவரைச் சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

அவுஸ்திரேலியா நாட்டின் மேற்குப் பகுதியில் வசித்து வரும் சமரி லியநகே என்ற இலங்கையைச் சேர்ந்த பெண் வைத்தியர். இவரது கணவர் தினேந்திரா அதுகோரல. இவர்களுக்கு 17 வயது சிறுமி ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும் நெருக்கமாகப் பழகத் தொடங்கியுள்ளனர். இந்த நெருக்கம் பாலுறவு வைத்துக் கொள்ளும் அளவிற்குச் சென்றுள்ளது.

இந்நிலையில், அவர்கள் மூவரும் சேர்ந்து உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சமரிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

தான் ஒரு இளம் பெண்ணுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது குறித்து தனது கணவர் வெளியில் சொல்லிவிட்டால், தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என்று அவர் பயந்துள்ளார்.

எனவே, தனது கணவரை கொலை செய்ய முடிவு செய்து, படுக்கையில் படுத்திருந்த தனது கணவரை சுத்தியலால் பலமாக அடித்துள்ளார். இதனால் அவர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தற்கு வந்த பொலிஸார் சமரியைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

விசாரணையில், இந்த கொலைக்கு வேறு சில காரணங்களும் கூறப்பட்டுள்ளன. கணவர் தொடர்ந்து பாலியலில் ஈடுபடுமாறு சமரியை வற்புறுத்தி வந்ததாகவும், இதனால், ஆத்திரம் அடைந்து கொலை செய்துள்ளார் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில் கூறியுள்ளார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட 17 வயது சிறுமியுடன் கடந்த 2014 முதல் இந்தத் தம்பதிக்குத் தொடர்பு இருந்து வந்துள்ளது.

அவர்கள் மூவரும் பலமுறை தனது வீட்டிலேயே பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், அந்த சிறுமிக்கு இருவரும் ஏராளமான பரிசுப் பொருட்களைக் கொடுத்துள்ளதாகவும், அதை சிறுமி நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.