நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள அத்­தி­யா­வ­சிய திருத்த  வேலை­களை  முன்­னிட்டு நாளை சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் ஞாயிற்றுகிழமை அதி­காலை 5.00 மணி வரை­யி­லான 15 மணி­நேர நீர்­வெட்டு கொழும்பு புறநகர் பகுதிகளில் அமுல் செய்­யப்­ப­ட­வுள்­ளது.  

Image result for நீர் நீர்வெட்டு

இதற்­க­மைய ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர பிரதான வீதி, ராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான அனைத்து உப பாதைகளிலும் இந்­நீர்­வெட்டு அமு­லாகும் என  தேசிய  நீர் வழங்கல்  வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது. 

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆகவே பொது­மக்கள் நீரை தேக்கி வைத்­துக்­கொள்­ளு­மாறு நீர் வழங்கல் மற்றும் வடி காலமைப்புச் சபை அறிவித்துள்ளது.