நாட்டில் காணப்படும் தேசிய பாடசாலைளுக்கு கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம், தொழில்நுட்பம், விவசாயம் உட்பட உயர்தர தொழில்நுட்ப பாடங்ளுக்கான 1,288 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும்  நிகழ்வு இன்று அபேகம வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நியமனம் பெற்ற பட்டதாரிகளில் 1223 பேர் ஆசிரியர் சேவை 3-1 க்கும், 65 பேர் 2-2 க்கும்  உள்வாங்கபட்டுள்ளனர். இவர்களுக்கு 21 நாட்கள் திசைமுகப்படுத்தல் பயிற்சி வழங்கபடவுள்ளது. அதன் பின்னர் பாடசாலைகளுக்கு நியமிக்கபடவுள்ளனர்.

தமிழ்மொழி மூலம்  297 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.  இவர்களில் ஆசிரியர் சேவை 3-1 க்கு 292 பேரும், 2-2 க்கு 05 பேரும்  உள்வாங்கபட்டுள்ளனர்.

இவர்களில் ஆங்கிலமொழி மூலமான 40 பட்டதாரி ஆசிரியர்களும் அடங்குவர்.