தன்னுடைய ரசிகர் ஒருவர் விரும்பியதற்காக மூத்த நடிகையான ஸ்ரீதேவி அவரது பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளியொன்றை சென்னையில் தொடங்குவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து நடிகை ஸ்ரீதேவி பேசும் போது,‘இது எமக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகக் கருதுகிறேன். அந்த நடிப்பு பயிற்சி பள்ளியின் பாடதிட்டத்தில் என்னுடைய நடிப்பில் வெளியான படங்களும், அதில் என்னுடைய ஸ்டைல் நடிப்பு மற்றும் நடனமும் இடம்பெற்றிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது.’ என்றார்.

அடுத்த ஆண்டில் தொடங்கப்படவிருக்கும் இந்த நடிப்பு பயிற்சி பள்ளிக்கு இப்போதே இந்தியாவில் பல கிளைகள் தொடங்குவதற்கு திட்டமும் இருக்கிறது என்கிறார் இந்த ஸ்ரீதேவி நடிப்பு பயிற்சி பள்ளியின் நிர்வாக இயக்குநரும், ஸ்ரீதேவியின் ரசிகருமான அனீஷ் நாயர்.

தகவல் : சென்னை அலுவலகம்