சுமார் 8 மாதங்­க­ளுக்கு முன்னர் காணா மல் போன­தாக கூறப்­படும் காலி பிர­தே­சத்தின் பிர­பல வர்த்­தகர் ஒரு­வரின் 16 வய­ தான மகள் ஹோமா­க­மயில்  வைத்து மீட்­கப்பட்­டுள்ளார். 

ஹோமா­கம பகு­தியில் சிறிய வீடொன்றில் சிறை­வைக்­கப்பட்­டி­ருந்த நிலையில் அவரை மீட்­ட­தாக பொலி ஸார் தெரி­விக்­கின்­றனர்.

இது தொடர்பில் பொலிஸார் சந்­தேக நபர் ஒரு­வ­ரையும் கைது செய்­துள்­ளனர். குறித்த வீட்டில் சிறை வைக்­கப்பட்­டி­ருந்த சிறுமி அங்­கி­ருந்து தப்பிச் சென்றால், தந்­தை­யையும் தாயையும் கொலை செய்­வ­தாக அச்­சு­றுத்­தியே சந்­தேக நபர் அவரை அங்கு சிறை­வைத்­தி­ருந்­துள்ளார். 

இந் நிலையில் இவ்­வாறு கடத்தல், தடுத்து வைப்பு தொடர்பில் கைது செய்­யப்பட்­டுள்ள சந்­தேக நபர் கடத்­த­லுக்குள்­ளான சிறு­மியின் தந்­தை­யிடம் சார­தி­யாக செயற் ­பட்­டவர் எனவும் அவர் தொழில் கவன மின்மை காரணமாக நீக்கப்பட்டவர் என வும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.