இலங்கையின் பொருளாதார செயல்திறன் குறித்த மூன்றாம் கட்ட ஆய்வுகளை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் நிறைவு செய்துள்ளனர். இதன்மூலம் 250 மில்லியன் டொலர் நிதி நாட்டுக்குக் கிடைக்கவுள்ளது.

இலங்கைக்கு வழங்கிவரும் நிதியுதவிகளின் செயற்பாடுகள் குறித்த ஆய்வுகளை சர்வதேச நாணய நிதியம் மேற்கொண்டிருந்தது. மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் இறுதிக் கட்ட ஆய்வுகள் நேற்றுடன் (7) நிறைவடைந்தன.

ஆய்வுகளை மேற்கொண்ட சர்வதேச நாணய நிதிய உயரதிகாரிகள், கடந்த செப்டம்பர் மாதம் முதலான இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகள் தமக்குத் திருப்தி தந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

அத்துடன், இலங்கையின் வளர்ச்சிப் போக்கை அடிப்படையாக வைத்து நோக்குமிடத்து, மேலதிக நிதியுதவி இலங்கைக்குத் தேவைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன்மூலம், குறித்த தொகை நாட்டுக்குக் கிடைக்கவுள்ளது.