இலங்கை வைத்தியர்கள் சிலர் நாட்டிற்குள் மேற்கொண்ட சிறுநீரக கடத்தல் சம்பவம் குறித்து தேடிப்பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினரின் அறிக்கை இன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

குறித்த குழுவினர் கடந்த 23ம் திகதி சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தனியார் வைத்தியசாலைகள் உள்ளிட்ட இடங்களில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.