ரயில்வே சாரதிகளின் தொழிற்சங்கங்கள் நேற்று (7)  அதிகாலை ஆரம்பித்த வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில், சம்பள முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் ரயில்வே திணைக்களத்தின் வேறு சில தொழிற்சங்கங்களும் இன்று (8) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளன.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம், கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் மற்றும் ரயில்வே காவலர்கள் சங்கம் என்பனவே வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளன.

இன்று மட்டும் சுமார் 200 புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதால் பெருமளவான பயணிகள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.

தொடர்ந்து வரும் வேலை நிறுத்தத்தால் நேற்றுப் புறப்படவிருந்த இரவு நேர தபால் புகையிரதங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனர்.