மகனுக்கு பாடசாலை அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்ட தந்தை, தீவைத்துத் தற்கொலை செய்துகொண்டார்.

பெங்களூரு பொறியியலாளர் ரித்தேஷ் (35). இவர் தனது ஏழு வயது மகனை நகரின் பிரபல பாடசாலையில் சேர்க்க விரும்பினார். ஆதித்ய பஜாஜ் என்பவர் மேற்படி அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி 2.5 இலட்ச ரூபாயை லஞ்ச முற்பணமாகப் பெற்றுள்ளார்.

எனினும் ரித்தேஷின் மகனுக்கு அனுமதி கிடைக்கவில்லை. கொடுத்த பணத்தை ரித்தேஷ் திருப்பிக் கேட்டபோது, தர முடியாது என மறுத்துள்ளார் ஆதித்யா. 

இந்நிலையில், பணத்தைக் கேட்பதற்காக ஆதித்யாவின் அலுவலகம் சென்ற ரித்தேஷ், கையோடு கொண்டுபோயிருந்த எரிபொருளை உடலில் ஊற்றிக்கொண்டு பணத்தைத் திருப்பித் தருமாறு அச்சுறுத்தியுள்ளார்.

அதற்கும் மசியாததால் ரித்தேஷ் உடலில் தீ வைத்துக்கொண்டு பலியானார்.

ஆதித்யா மீது பொலிஸார் கொலைக்குத் தூண்டிய மற்றும் ஏமாற்றுப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.