மக்களின் கடும் விமர்சனங்களை அடுத்து, 2018இல் வெளியாகவிருந்த ‘எமோஜி’களுள் ஒன்றை அதன் தயாரிப்பாளர்கள் கைவிட்டுள்ளனர். காரணம்...? அதன் வடிவமே!

‘யுனிகோட் கன்சோர்ட்டியம்’ எனும் நிறுவனமே எமோஜிகளைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது. அடுத்த வருடம், மலக் குவியலை (!) அடிப்படையாகக் கொண்ட எமோஜிகள் சிலவற்றை உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

இதை ஊக்குவிக்கும் வகையில் மலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு எமோஜியை ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது.

இதைக் கண்டு அருவருத்த பலரும் மலத்தை அடிப்படையாகக் கொண்டு எமோஜிகளைத் தயாரிக்க வேண்டியதன் காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, இவ்வகையான எமோஜிகளை அடுத்த வருடம் வெளியிடப்போவதில்லை என யுனிகோட் கன்சோர்ட்டியம் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

எனினும் இத்திட்டத்தை முழுமையாகக் கைவிட்டுவிடவில்லை என்றும் பயமுறுத்துகிறது (?) யுனிகோர்ட் கன்சோர்ட்டியம்!