மன்னார் பாக்கு நீர் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து இழுவைப்படகுகளின் மூலம் மீன்பிடியில் ஈடபட்டதாக தெரிவித்து கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில்  வைக்கப்பட்டிருந்த 13 இந்திய மீனவர்களுக்கும் தொடர்ந்து விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12.10.2017, அன்று ஐந்து இந்திய மீனவர்களும் 17.12.2017 அன்று எட்டு இந்திய மீனவர்களுமாக 13 இந்திய மீனவர்கள் இரு இந்திய இழுவைப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள இவ் இந்திய மீனவர்களை நேற்று புதன்கிழமை (06.12.2017) மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் இம்மனுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் மீண்டும் ஆஐர்படுத்தியபோது இவர்களை தொடர்ந்து எதிர்வரும் 18.12.2017 வரை விளக்கமறியலை நீடிக்க  பதில் நீதிவான் கட்டளைப் பிறப்பித்துள்ளார்.

இவர்கள் நலன் கவனிப்பதற்காக மன்னார் நீதிமன்றத்துக்கு யாழ்.இந்திய துணை தூதரகத்திலிருந்து அதிகாரி வந்திருந்த சமயம் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இவ் இந்திய மீனவர்களில் மூவருக்கு ஒருவருக்கு அம்மை நோய் பீடிக்கப்பட்ட அறிகுறி இருப்பதாகவும் இன்னொருவருக்கு குளிருடன் காய்ச்சல் இருந்து வருவதாகவும் மற்றவர் ஒருவருக்கு வயிற்றுவலி அடிக்கடி இருப்பதால் வைத்தியத்தியத்திற்கான நடவடிக்கையை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளும்படி இந்திய அதிகாரியிடம் கேட்டுக் கொண்டனர்.

இது விடயமாக யாழ். இந்திய துணை தூதரக அதிகாரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.