ஸிக்கா வைரஸ் குறித்து அநாவசிய அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பிரேஸில் உள்ளிட்ட ஸிக்கா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்கு எவரேனும் பயணம் மேற்கொள்வதாயின், இந்த வைரஸ் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அந்தப் பிரிவின் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை உட்பட பிராந்திய நாடுகளில் ஸிக்கா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்கள் குறித்து இதுவரை தகவல்கள் பதிவாகவில்லை எனவும் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்தார்.

இலங்கையில் புகைத்தல் காரணமாகவும் பிறக்கின்ற குழந்தைகளின் தலை சிறியதாகவும், மூளையின் அளவு குறைந்தும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், டெங்கு நுளம்புகளாலேயே ஸிக்கா வைரஸ் காவிச் செல்லப்படுவதால், பிரேஸில் போன்ற நாடுகளுக்கு செல்கின்றவர்கள் நுளம்புக் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்வது உகந்ததாகும் என்றும் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் மேலும் எச்சரித்துள்ளார்.