ஓட்டப் பந்தயத்தில் தோற்ற தனது நாயை சீனர் ஒருவர் அடித்தே கொன்ற காணொளி இணையவாசிகளால் பரிமாறப்பட்டு வருவதுடன் கடும் கண்டங்களுக்கும் உள்ளாகியுள்ளது.

இந்த சீன நபர், தனது வளர்ப்பு நாயின் பின்னங்கால்களைப் பிடித்துத் தூக்கி ஒரு சுற்றுச் சுற்றி நிலத்தில் ஓங்கி அடித்துக் கொல்லும் காட்சிகள் அலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டப் பந்தயத்தில் தனது நாய் தோற்றதால் பணத்தைப் பறிகொடுக்க நேர்ந்ததாகக் கூறியிருக்கும் இந்த நபர், உயிரிழந்த நாயை சமைத்து உண்ணப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உபயோகப்படாத வளர்ப்புப் பிராணிகளை மற்றவர்களும் கொன்று தின்ன வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இக்காணொளியைக் கண்ட பலரும் குறித்த சீனர் மீதான தமது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.