ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ட்ரம்ப் அறிவித்ததையடுத்து மத்திய கிழக்கில் புதிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன.

“இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறேன்” என, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து அறிவித்தார்.

இவ்வறிவிப்பின் மூலம் ஜெருசலேமை உரிமை கோரிய இஸ்ரேல்-பலஸ்தீனத்தின் ஏழு தசாப்த போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். 

அறிவிப்புடன் நின்றுவிடாத ட்ரம்ப், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்க சார்பு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அதன் தலைவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பினால் புதிய வன்முறைகள் வெடிக்கலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.