தங்­காலை வங்­கிக்­கொள்ளை 6 விசேட பொலிஸ் குழுக்கள் களத்தில்

Published By: Robert

07 Dec, 2017 | 09:51 AM
image

தங்­காலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட குடா­வெல்ல மக்கள் வங்கி கிளை யில்  துப்­பாக்கி முனையில் இடம்­பெற்ற பாரிய கொள்ளை தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்­காக ஆறு விசேட பொலிஸ் குழுக்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட் ­டுள்­ளன. 

தங்­காலை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­ யட்சகர் கே.ஜி.எல்.ஸ்ரீதாலின் நேரடி கட்­டுப்­பாட்டில் இந்த ஆறு  பொலிஸ் குழுக்­களும் பல்­வேறு கோணங்­களில் சந்­தேகநபர்­களைத் தேடி விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக தென் பிராந்­தி­யத்தின் உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

 நேற்று முன்­தினம் காலை 9.50 மணி­ய­ளவில் வழ­மை­யான வங்கி நட­வ­டிக்­கை­க­ளின்­போது, குடா­வெல்ல மக்கள் வங்கி கிளை­யினுள், மோட்டார் சைக்­கிளில் வந்த இருவர் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் வண்ணம் புல் பேஸ் ஹெல்மட் அணிந்து உள் நுழைந்­துள்­ளனர். அவர்கள் 9 மில்லி மீற்றர் ரக கைத்­துப்­பாக்­கியைக் காட்டி  முழு வங்­கி­யையும் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­துள்ள நிலையில், வங்­கியில் கொடுக்கல் வாங்கல் நட­வ­டிக்கை தொடர்பில் தயார் நிலையில் இருந்த பணத்தை முழு­மை­யாக கொள்­ளை­யிட்­டு­விட்டு தப்பிச் சென்­றுள்­ளனர்.

 கொள்­ளையின் பின்னர் செல்ல முற்­படும் போது, அங்­கி­ருந்த வாடிக்­கை­யாளர் ஒரு­வ­ரையும் கொள்­ளை­யர்கள் சுட்­டுள்­ளனர். அவ­ரது காலில் சூட்டுக் காயம் ஏற்­பட்­டுள்ள நிலையில் குறித்த நபர் தங்­காலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­டுள்ளார். கொள்ளை தொ­டர்பில் நேற்று மாலை வரை பொலிஸார் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில், வங்­கிக்­கொள்­ளையில் ஈடு­பட்­ட­வர்கள் இரு­வரும், கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி, அளுத்­கம நகரில் அமைந்­துள்ள வெளி­நாட்டு நாண­யங்­களை மாற்றும் நிலையம் ஒன்றில் கொள்­ளை­யிட முயற்­சித்த சம்­ப­வத்­து­டனும் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளாக இருக்க வேண்டும் என சந்­தேகம் எழுந்­துள்­ளது. 

குறித்த நாணய மாற்று நிலை­யத்தில் பதி­வான சி.சி.சி.ரி.வி. காணொ­ளிகள், அதன்­போது முன்­னெ­டுக்­கப்­பட்ட துப்­பாக்கிச்சூட்டின் போது வெளிப்­பட்ட சன்­னங்கள் ஆகி­ய­வற்றை இந்த வங்­கிக்­கொள்­ளை­யுடன் ஒப்­பீடு செய்யும் போது பொலி­ஸா­ருக்கு இந்த சந்­தேகம் எழுந்­துள்­ளது. 

மாத்­தறை பிரதிப் பொலிஸ் மா அதிபர்  டபிள்யூ.கே.ஜய­லத்தின் உத்­தரவுக்கு அமைய, தங்­காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  கே.ஜி.எல்.ஸ்ரீஜிதாலின் நேரடிக் கட்டுப்பாட்டில் தங்காலை பிராந் திய குற்றத்தடுப்புப் பிரிவும் தங்காலை பொலிஸாரும் இணைந்து விசாரணை களை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19