பிரேசில் ஜனா­தி­பதி டில்மா ரூஸெப், ஸிகா வைரஸ் பர­வ­லுக்கு கார­ண­மான நுளம்­புகள் தொடர்­பான போர் பிர­க­டனம் ஒன்றை செய்­துள்ளார்.

நாட்டு மக்­க­ளுக்கு தொலைக்­காட்சி மூலம் ஆற்­றிய உரையின் போதே அவர் இவ்­வாறு பிர­க­டனம் செய்­துள்ளார்.

இந்தப் பிர­க­ட­னத்தின் பிர­காரம் நாளை சனிக்­கி­ழமை வீடு­க­ளிலும் அலு­வ­ல­கங்­க­ளி­லு­மி­ருந்து நுளம்­பு­களை அகற்றும் நட­வ­டிக்­கையில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான படை­வீ­ரர்­களும் அர­சாங்க ஊழி­யர்­களும் ஈடு­ப­ட­வுள்­ள­தாக ஜனா­தி­பதி கூறினார்.

பெரு­ம­ளவு நுளம்­புகள் மக்­க­ளது வீடு­க­ளுக்கு அரு­கி­லேயே விருத்­தி­யா­வ­தாக அவர் தெரி­வித்தார்.

''நாம் அனை­வரும் (நுளம்­பு­க­ளுக்கு எதி­ரான) இந்தப் போராட்­டத்தில் பங்­கேற்க வேண்டும்'' என அவர் வலி­யு­றுத்­தினார்.

ஸிகா வைரஸானது விருத்தியடையாத மூளையுடன் குழந்தைகள் பிறப்பதுடன் தொடர்பைக் கொண்டுள்ளது.