நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை முன்னிட்டு, தேர்தல்கள் கடமைகளுக்கு பொறுப்பாக, பொலிஸ் நிர்வாகத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன  நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிர்வாகத்துக்கு மேலதிகமாக கடந்த திங்கள் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின்போது, பொலிஸ் நிர்வாகத்துக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன கடமையாற்றியிருந்தார்.

அவரது ஓய்வுக்கு பின்னர் தேர்தல்கள் கடமைகளுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஒருவர் இதுவரை நியமிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், உள்ளூராட்சி தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகியுள்ளதையடுத்தே சி.டி. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.