12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்

Published By: Priyatharshan

05 Feb, 2016 | 09:34 AM
image

12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது.

இன்று மாலை 5 மணிக்கு இந்திரா காந்தி தடகள மைதானத்தில் நடைபெறுகின்ற இப் போட்டியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார். 

இன்று ஆரம்பமாகும் இப்போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறும். 

1984 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இப்போட்டி அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 

இதில் இந்தியாவிலிருந்து 519 பேரும், இலங்கையிலிருந்து 484 பேரும், பாகிஸ்தானிலிருந்து 337 பேரும், ஆப்கானிஸ்தானிலிருந்து 254 பேரும், பங்களாதேஷிலிருந்து 409 பேரும், பூட்டானிலிருந்து 87 பேரும், நேபாளத்திலிருந்து 398 பேரும், மாலைதீவிலிருந்து 184 பேரும் பங்கேற்கவுள்ளனர். 

12 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் 23 விளையாட்டுகளில் 228 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 2,672 வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46