நாவலப்பிட்டியில், இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொலைசெய்யப்பட்டார். இச்சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியபோது, சந்தேக நபர் ஒருவர் மற்றொருவரது தலையில் பியர் போத்தலால் தாக்கியுள்ளார். இதில் பெருமளவு இரத்தம் வெளியேறிய அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பலந்த்தொட்ட, ரம்புக்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.