ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் மருத்துவர்கள் சிலர் இன்று காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயிலுனர் மருத்துவர்கள் உரிய சிகிச்சை நிலையங்களுக்கு சேவையில் அமர்த்தப்படாமைக்கு எதிராகவே இந்த வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் வைத்தியசாலையின் அவசர சேவை பிரிவுகள் இயங்கி வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தனுஸ்க பெரேரா தெரிவித்தார்.