முன்னணி வாகன வர்த்தக நாமமான TVS “ஆண்டின் சிறந்த சந்தைப்படுத்தல் நிறுவனம் - இலங்கை” எனும் விருதை ஆசியா சந்தைப்படுத்தல் சம்மேளனத்திடமிருந்து பெற்றுள்ளது.

2016 /17 காலப்பகுதிக்காக இந்த விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய பிராந்தியத்தில் காணப்படும் சந்தைப்படுத்தலுக்கான முன்னணி மேலாண்மை அமைப்பாக ஆசிய சந்தைப்படுத்தல் சம்மேளனம் திகழ்கிறது. இதன் அங்கத்துவ நாடுகளில் ஜப்பான், சீனா, சிங்கப்பூர், தாய்வான், கொரியா,மலேசியா, மொங்கோலியா, ஹொங் கொங், இந்தோனேசியா, பிலிப்பைன், தாய்லாந்து,வியட்நாம் மற்றும் மியன்மார் ஆகியன அடங்கியுள்ளன.

ஆசிய சந்தைப்படுத்தல் சிறப்பு விருதுகளுக்காக நுழைவுத்தகைமையாக குறித்த வர்த்தக நாமத்தின் தேசிய சந்தைப்படுத்தல் அமைப்பால் அவ்வர்த்தக நாமம் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் இலங்கையில் சந்தைப்படுத்தப்படும் எந்தவொரு வர்த்தக நாமமும் சர்வதேச மட்டத்தில் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தால் உள்நாட்டு தேசிய சந்தைப்படுத்தல் அமைப்பினால் பிரேரிக்கப்பட முடியும்.

TVS லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கருத்துத்தெரிவிக்கையில்,

“ஆண்டின் சிறந்த சந்தைப்படுத்தல் நிறுவனம் எனும் விருதை ஆசிய சந்தைப்படுத்தல் சம்மேளனத்திடமிருந்து பெற்றுக்கொள்வது என்பது எமது எல்லைகளுக்கு அப்பாற்பட்ட விடயமாக அமைந்திருக்கவில்லை ஏனெனில், TVS வர்த்தக நாமம் கடந்த சில வருடங்களில் சிறப்பாக செயலாற்றியிருந்தது. 2015ஆம் ஆண்டின் சிறந்த தயாரிப்பு வர்த்தக நாமமாக தெரிவாகியிருந்ததுடன் 2016ஆம் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாகவும் தெரிவாகியிருந்தது.

குறிப்பாக 2016 ஆம் ஆண்டு TVS வர்த்தக நாமம் ஆறு விருதுகளை தனதாக்கியிருந்தது. இதில் நான்கு தங்க விருதுகளும், இரு வெள்ளி விருதுகளும் உள்ளடங்கியிருந்தன.

தேசிய சந்தைப்படுத்தல் விருதுகள் வழங்கும் நிகழ்வொன்றில் பெறப்பட்ட உச்ச சாதனையாக இது அமைந்துள்ளது. எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு நாம் நன்றி தெரிவிப்பதுடன், இந்த மாபெரும் சாதனையை அவர்களால் தான் எம்மால் எதிர்கொள்ளக்கூடியதாக இருந்தது” என்றார்.

ஆசிய சந்தைப்படுத்தல் சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட இந்த விருதுகளின் நடுவர் குழுவில் முன்னணி பிரமுகர்கள் உள்ளடங்கியிருந்தனர்.

TVS தெரிவுகளில் காணப்படும் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களில், TVS அபாச்சி  முன்னணி வர்த்தக நாமமாக திகழ்கிறது. 

 2.5 மில்லியனுக்கும் அதிகமான அபாச்சிகள் வீதிகளில் காணப்படுகின்றன. என்ஜின் சோர்ட் ஸ்ட்ரோக் தன்மை கொண்டதால் இதே திறன் கொண்ட இதர சைக்கிள்களுடன் ஒப்பிடுகையில் உயர் acceleration பெறுமதிகளை அபாச்சி கொண்டுள்ளது.

 0–60 km/h எனும் வேகத்தை 3.9 செக்கன்களில் பதிவு செய்யக்கூடியது. மேலும் 0–100 km/h எனும் வேகத்தை 12.07 செக்கன்களில் பதிவு செய்யக்கூடியது.

பரிசோதனை நிலைகளில் பாதுகாப்பான அதியுயர் வேகம் 128 km/h ஆக அமைந்துள்ளது. நேர் வீதிகளில் 48 km/l எரிபொருளையும் நகர சவாரிகளின் போது 40 km/l எரிபொருள் பாவனையையும் வழங்கும்.

யுனைட்டட் மோட்டர்ஸ் பி. எல்.சி, ரி.வி.சுந்தரம் ஐயங்கார் அன்ட் சன்ஸ் லிமிட்டெட் மற்றும்  TVS மோட்டர்ஸ் ஒஃவ் இந்தியா ஆகியவற்றின் இணை நிறுவனமாக  TVS லங்கா திகழ்கிறது.

TVS லங்கா நிறுவனம்  மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், உதிரிப்பாகங்கள் மற்றும் லுப்ரிகன்ட்ஸ் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.