பெருந்­தோட்­டத்­துறை தமி­ழர்­களின் வர­லாறு தொடர்­பான 'எக்­கோயிங் ஹில்ஸ் (எதி­ரொ­லிக்கும் குன்­றுகள்) என்ற 30 நிமிட ஆவ­ணப்­படம் கொழும்பு–-7, பௌத்­த­லோக மாவத்­தை­யி­லுள்ள தேசிய திரைப்­படக் கூட்­டுத்­தா­ப­னத்தின் தராங்­கனி திரை­ய­ரங்கில் இன்று வெள்ளிக்­கி­ழமை இரவு 7.00 மணிக்கு திரை­யி­டப்­ப­ட­வுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் முன்­னி­லையில் திரை­யி­டப்­ப­ட­வுள்ள இந்த ஆவ­ணப்­பட திரைப்­பட ஆரம்ப நிகழ்வில் இந்­திய வெளி விவ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்­ள­டங்­க­லான முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொள்­கின்­றனர்.

சுஷ்மா சுவராஜ், அவ­ரது இணைத் தலை­மையில் இந்­திய- இலங்கை கூட்டு ஆணைக்­கு­ழுவின் 9ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ள இலங்கை வர­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்தக் கூட்டத் தொடரில் இரு நாடு­க­ளதும் சமூக, கலா­சார, கல்வி பிரச்­சி­னைகள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளன.

இந்­நி­லையில் மேற்­படி ஆவ­ணப்­ப­ட­மா­னது 1800 களில் இலங்­கைக்கு தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட மக்களது கதை மற்றும் அவர்களது தற்போதைய நிலைமை என்பன குறித்து விபரிக்கிறது.