இந்­தி­யாவில் பசுவை வழி­படும் இந்­துக்­களை கொலை செய்­யப்­போ­வ­தாக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் மிரட்டல் விடுத்­துள்­ளனர்.

ஐ.எஸ். அமைப்பின் கொள்கை பரப்பு பத்­திரிக்­கை­யான தபிக்கில் தீவி­ர­வாதி ஒருவர் வழங்­கி­யுள்ள பேட்­டி­யி­லேயே மேற்­கண்­ட ­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் அதில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, பசுக்­களை வழி­படும் இந்­துக்­களை குறிவைத்து கொலை செய்­வ­தற்­காக எமது ஐ.எஸ். அமைப்பில் கோரசான் என்ற தனிப்­படை அமைக்­கப்­பட்­டுள்­ளது. ஐ.எஸ். இயக்கம் இந்­தி­யாவின் ஜம்மு – காஷ்மீர் மாநி­லத்தில் நுழைய விரும்­பு­கி­றது இதற்­காக இந்­துக்­களை மட்டும் அல்ல ஷியா முஸ்­லிம்­க­ளையும் கொல்­வ­தற்கு ஐ.எஸ்.திட்­ட­மிட்­டுள்­ளது என்று தெரி­வித்­துள்ளார்.

ஐ.எஸ். அமைப்பு இந்­தி­யா­வுக்குள் நுழைய தீவிர முயற்சி செய்து வரு­கி­றது.இணையம் மூலம் பல இந்­தி­யர்­களை அணுகி அவர்­களை தங்கள் பக்கம் ஈர்த்து வரு­கி­ன்றமை குறிப்பிடத்தக்கது.