அமெரிக்காவின் நியு ஜெர்சி மாநிலத்தில் உள்ள பெனிங்டன்னில் எனும் இடத்தில் அமைந்துள்ள பாடசாலையில் பணிபுரிந்து வரும் 28 வயதுடைய அலீசியா மரி ரெட்டி  என்ற ஆசிரியை தனது 16 வயது மாணவனுடன் உடல் உறவு கொண்டுள்ளார். 

பெனிங்டன்  பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் மாணவனுடன் ஆசிரியை உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாடசாலை நிர்வாகத்திற்கு தெரியவரவே குறித்த ஆசிரியை பணி நீக்கம் செய்ததோடு பொலிஸாருக்கும் மாணவனின் பெற்றோர்க்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிஸார்  மரி ரெட்டியை கடந்த 1ஆம் திகதி கைது செய்து  அவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்தனர்.

விசாரணைகளின் போது குறித்த ஆசிரியை இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் என தெரிய வந்துள்ளது.