மாணவி மீதான நிர்­வாண தாக்­குதல்; 5 பேர் கைது

Published By: Robert

05 Feb, 2016 | 09:06 AM
image

தான்­சா­னியா மாணவி தாக்­குதல் தொடர்­பாக இது­வரை 5 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக கர்­நா­டக முத­ல­மைச்சர் சித்­தா ­ரா­மையா தெரி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்­பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

பெங்­க­ளூரில் தான்­சா­னியா நாட்டு கல்­லூரி மாண­வியின் ஆடை­களை களைந்து பொது­மக்கள் தாக்­கிய சம்­பவம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த தாக்­குதல் தொடர்­பாக இது­வரை 5 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இந்த சம்­பவம் அதிர்ச்சி அளிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இது தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­து­மாறு பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளேன். மேலும் இது தொடர்­பாக வெளி­யு­றவு அமைச்­ச­கத்­திற்கு அறிக்கை அனுப்பி இருக்­கிறோம். நிச்­சயம் இந்த விவ­கா­ரத்தில் உரிய நீதி கிடைக்க வழி செய்வோம்.

இத­னி­டையே, தான்­சா­னியா மாணவி மீதான தாக்­குதல் சம்­பவம் தொடர்­பாக உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று தான்­சா­னியா தூதர் ஜோன் இந்­திய அர­சுக்கு வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

பெங்­க­ளூ­ரில் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு நிகழ்ந்த விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உயி­ரி­ழந்தார். இதை­ய­டுத்து இறந்து போன பெண்ணின் உற­வி­னர்கள், விபத்து ஏற்­ப­டுத்­தி­ய­தாக நினைத்து கார் ஒன்றை வழி மறித்து தாக்­குதல் நடத்­தினர். அப்­போது அவர்கள் அந்த காரில் இருந்த தான்­சா­னிய நாட்டைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒரு­வரை கீழே இழுத்து அடித்து உதைத்­தனர். மேலும், அவ­ரது ஆடை­க­ளையும் களைந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

பின்னர் அவ் வழி­யாக வந்த பேருந்தில் ஏறி தப்­பிக்க முயன்ற மாண­வியை துரத்திச் சென்ற அந்த கொடூர கும்பல், அம் மாண­வியை பஸ்­ஸி­லி­ருந்து வௌியே இழுத்து தாக்­கி­யுள்­ளது பாதிக்கப்பட்ட மாணவி பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை வர்த்தக மேலாண்மை (பி.பி.எம்) பிரிவில் கல்வி கற்­று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52