இந்திய கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா திருமண பந்தத்தில் இணையவிருக்கிறார்.

இந்த வருடம் இந்திய அணி வீரர்களுக்கு திருமணவிழா காலம்  அனைவரும் வரிசையாக திருமணம் பந்தத்தில் இணைந்து கொள்ளுகின்றனர் .

சுரேஷ் ரெய்னா,ரோஹித் சர்மா,ஹர்பஜன் சிங்,மோகித் சர்மா,யுவராஜ் சிங் வரிசையில் தற்போது சகலதுறை வீரர் ஜடேஜாவும் இன்று இணையவுள்ளார்.

சிறப்பாக பந்துவீசி எதிரணியினரை மிரள வைத்த ஜடேஜாவுக்கு இன்று  ராஜ்கோட்டை சேர்ந்த ரீவா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

ரீவா மெக்கானிகல் பொறியியல்  பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.