இந்தியா - ஹைதராபாத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து தப்பிக்க ஓடும் வேனிலிருந்து குதித்த 7 மாத கர்ப்பிணி உயிரிழந்துள்ளார்.

 

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வந்த 32 வயதுடைய 7 மாத கர்ப்பிணியான உதே கலாவதி பழைய துணிகளை விற்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

7 மாத கர்ப்பிணியான இவர் கடந்த 2ஆம் திகதி வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது, பஸ்ஸை தவறவிட்டதால் ஒரு வேனில் உதவி கேட்டு தனது குழந்தையுடன் பயணித்துள்ளார்.

சென்று கொண்டிருந்தபோது வேனில் இருந்த டிரைவர் மற்றும் கிளினர் இருவரும் சேர்ந்து கலாவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க கலாவதி ஓடும் வேனில் இருந்து குதித்துள்ளார். சம்பவ இடத்திலேயே கலாவதி உயிரிழக்க அவர்கள் குழந்தையை இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த கலாவதியின் சடலத்தை மீட்டுள்ளனர். 

பொலிஸார் சந்தேக நபர்களை தேடும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.