உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் இறுதி தீர்­மானம் எடுப்­ப­தற்­காக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இன்று கூட­வுள்­ளது. குறித்த கூட்­ட­மா­னது யாழ்ப்­பாணம் மாட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் பிற்­பகல் இரண்டு மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 

ஏற்­க­னவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்­சிகள் நேற்று முன்­தினம் பிற்­பகல் மூன்று மணி முதல் இரவு எட்டு மணி வரையில் ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் விரி­வான கலந்­து­ரை­யா­டல்­களை செய்­தி­ருந்­தன.

குறித்த கலந்­து­ரை­யா­டலில் 80 சத­வீ­த­மான இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வேட்­பாளர் பட்­டி­யலை பூர்த்தி செய்­வ­தற்­கான இறுதி தீர்­மானம் எடுப்­ப­தற்­கான சந்­திப்­பா­கவே இன்று நடை­பெறும் சந்­திப்பு அமை­ய­வுள்­ளது. 

இதே­வேளை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் நடை­பெ­ற­வுள்ள உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு ஜன­நா­யக போரா­ளிகள் அமைப்பும் முன்­வந்­தி­ருந்­தது. இதற்­கான பச்­சைக்­கொடி இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சி­யினால் காட்­டப்­பட்­டுள்­ளது. 

முன்­ன­தாக கடந்த பாரா­ளு­மன்ற தேர்­த­லின்­போது ஜன­நா­யக போரா­ளிகள் அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணை­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­த­போதும் வவு­னி­யாவில் இடம்­பெற்­றி­ருந்த சந்­திப்­பின்­போது ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி தொடபில் காணப்­பட்ட சந்­தே­கங்­களின் கார­ண­மாக கூட்­ட­மைப்பின் தலைமை உள்­ளிட்­ட­வர்கள் அத்­த­ரப்­பினை இணைத்­துக்­கொள்­வ­தற்கு விரும்­பி­யி­ருக்­க­வில்லை. 

இவ்­வா­றான நிலையில் தொடர்ச்­சி­யாக நடை­பெற்று வந்த பேச்­சு­வார்த்­தைகள் மற்றும் கலந்­து­ரை­யா­டல்­களின் அடிப்­ப­டையில் அவ்­வ­மைப்பு தற்­போது கூட்­ட­மைப்­பினுள் உள்­வாங்­கு­வ­தற்­கான இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டுள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. 

ஜன­நா­யகப் போரா­ளிகன் அமைப்­பா­னது தமது அமைப்பு சார்பில் உள்­ளு­ராட்சி மன்­றங்­களில் கள­மி­றங்­கு­வ­தற்கு எதிர்ப்­பார்த்­துள்ள வட்­டா­ரங்கள் தொடர்­பி­லான பட்­டி­ய­லொன்றை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மை­யி­டத்தில் கைய­ளித்­தி­ருப்­ப­தா­கவும் அறிய முடி­கின்­றது. 

இதே­வேளை சுகு.ஸ்ரீதரன் தலை­மையில் செயற்­பட்டு வந்த ஈ.பி.ஆர்.எல்.எப். பத்­ம­நாபா அணி என நன்­க­றி­யப்­பட்ட தமிழர் சமூக ஜன­நா­யக கட்­சியும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இணைந்து கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது.

இதற்­கான பேச்­சு­வார்த்­தைகள் ஏறக்­கு­றைய நிறை­வுக்கு வந்­துள்­ளன. எவ்­வா­றா­யினும் தமிழர் சமூக ஜன­நா­யக கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் வட­கி­ழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான வரதராஜப்பெருமாள் நாடு திரும்பியுள்ள நிலையில் அக்கட்சி தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து இறுதிமுடிவுகள் அடுத்த சில நாட்களில் எடுக்கவுள்ளதோடு அதுகுறித்து தீர்க்கமான முடிவுகள் விரைவில் வெளியாகும் என தகவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.