கேரளா மாநிலத்தில் முஸ்லீம் மாணவிகள் நடுரோட்டில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மோகன்லால் நடிப்பில் வெளியான வெளிப்பயின்டே புஸ்தகம் என்ற படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் ரசிகர்கள் மூலம் நாடு முழுவதும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பாடலுக்கு ரசிகர்கள் நடனம் ஆடி வெளியான வீடியோ பிரபலமடைந்ததை அடுத்து ஜிமிக்கி கம்மல் பாடல் பிரபலமானது.

இந்நிலையில் கேரளா மலப்புரத்தில் பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் முஸ்லீம் மாணவிகள் 3 பேர் நடுரோட்டில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்காக மாணவிகள் நடமானடியுள்ளனர். 

சிலர் இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக அவர்கள் உடை அணிந்திருப்பது கண்டிக்கத்தக்கது என கடுமையாக சாடியுள்ளனர். ஆனால் பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில், எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக தலையில் ஹிஜாப் அணிந்த மூன்று பெண்கள் வீதியில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

குறித்த எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழை்ச்சி மலப்புரத்தில் சுகாதாரத்துறையால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல் மருத்துவம் பயிலும் மூன்று இஸ்லாமிய மாணவிகள் குறித்த பாடலுக்கு நடனமாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.