புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது. மருந்து, மாத்திரை, நவீன சிகிச்சை என்று இதற்கு நிவாரணமளிக்க ஏராளமான மருத்துவ வசதிகள் இருந்தாலும் மக்களிடம் முறையான விழிப்புணர்வு இல்லாததால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களைக் காப்பாற்ற முடிவதில்லை.

புற்றுநோயில் ஏராளமான புற்றுநோய்கள் இருக்கின்றன. அவற்றில் உணவுக்குழாய் புற்றுநோயும் ஒன்று. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவை ஏன் உருவாகிறது என்பதற்கான துல்லியமாக காரணம் கண்டறியப்படவில்லை. ஆனால் தற்போது இதற்கான காரணம் கண்டறியப்பட்டிருக்கிறது. வாயில் உற்பத்தியாகும் ஒரு வகை பாக்டீரியாக்களே இத்தகைய உணவுக்குழாய் புற்றுநோயிற்கு காரணமாகின்றன.

உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு FAC ESCC  என்ற இரண்டு வகையினதான செல்கள் தான் காரணம் என்றும்,  பெரும்பாலான உணவுக்குழாய் புற்றுநோயை அந்த பாதிப்பு ஏற்பட்டு 25 சதவீத அளவிற்கு வளர்ச்சியடைந்த பிறகு தான் கண்டறியப்படுகிறது என்றும் மருத்துவத்துறையினர் எச்சரிக்கிறார்கள்.

மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற காரணங்களினாலேயே இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் வாயில் உருவாகுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது என்றும், அதன் காரணத்தினாலேயே புகை மற்றும் மதுவை பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்கவேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 4 நிலைகள் வரை கொண்ட உணவுக்குழாய் புற்றுநோயின் பாதிப்பை தொடக்க நிலை மற்றும் 2ம் நிலையில் கண்டறியப்பட்டால் மருந்து, மாத்திரை, சத்திர சிகிச்சை, தெரபி, நவீன சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணம் கிடைக்கும்.

டொக்டர் ராஜ்குமார்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்