வவுனியா குளம் உடைப்பெடுக்க இருந்த நிலையில் நீர்ப்பாசன திணைக்களத்தின் துரித செயற்பாட்டால் விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

வவுனியா குளத்தில் துருசு அமைந்திருந்த பகுதியை சூழ மண் அரிப்பு ஏற்பட்டு குளத்தின் உட்புறமாக பாரிய துவாரம் ஏற்பட்ட நிலையில், குளக்கட்டு உடையும் நிலை ஏற்பட்டிருந்தது.

இன்று காலை குளத்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்தவர்கள் குளக்கட்டில் நீரின் போக்கு வழமைக்கு மாறாக காணப்பட்டதையடுத்து நீர்ப்பாசன திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர். 

இதனையடுத்து கமக்காரர் அமைப்பு மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தினர் விரைந்து செயற்பட்டு குளக்கட்டை புனரமைத்து வருகின்றனர்.

இதன் காரணமாக உடைப்பெடுக்கவிருந்த குளத்தில் பணிகளை விரைந்து புனரமைப்பு செய்தமையால் பாரிய விபத்தொன்று தடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.