சிரி­யாவில் இடம்­பெற்று வரும் உள்­நாட்டுப் போரால் இடம்­பெ­யர்ந்த மில்­லி­யன்­க­ணக்­கான மக்­க­ளுக்கு உத­வு­வ­தற்­கான நிதியை 9 பில்­லியன் டொல­ராக அதி­க­ரிக்கும் முக­மாக உலகத் தலை­வர்கள் லண்­டனில் வியா­ழக்­கி­ழமை கூடி­யுள்ளனர்.

ஐக்­கிய நாடுகள் அக­திகள் முகவர் நிலை­யத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள 4.6 மில்­லியன் அக­தி­களில் 2;5 மில்­லியன் பேர் துருக்­கி­யிலும் 1.01 மில்­லியன் பேர் லெப­னா­னிலும் 600,000 பேருக்கும் அதி­க­மானோர் ஜோர்­தா­னிலும் தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர்.

ஜோர்­தான் மன்னர் அப்­துல்லாஹ் தனது நாட்டில் சிரிய அக­தி­களின் தொகை கட்­டுப்­பாட்டை இழந்­துள்­ள­தாக எச்­ச­ரித்து மேற்­படி அக­தி­களின் தொகையைக் கட்­டுப்­ப­டுத்த மேற்­கு­லக நாடுகள் தனது நாட்­டிற்கு உதவ வேண்டும் என கோரி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது

ஜோர்­தானில் பதிவு செய்­யப்­ப­டாத நிலையில் மேலும் ஒரு மில்­லியன் சிரிய அக­திகள் உள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்கம் தெரி­விக்­கி­றது.

இந்­நி­லையில் ஜோர்­தானில் 100 அகதிக் குடும்­பங்கள் வசிப்­ப­தற்­காக திறந்து வைக்­கப்­பட்ட அல்–ஸாதாரி முகாமில் தற்­போது 80,000 க்கும் அதி­க­மான அக­திகள் தங்­கி­யி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஒரு கிராமம் போன்று விசாலமடைந்துள்ள அந்த முகாமின் தோற்றப்பாட்டை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.