தோட்டக்காணி அபகரிப்புக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் 

Published By: Priyatharshan

04 Dec, 2017 | 11:01 AM
image

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டத்திற்கு சொந்தமான காணியை வெளியார் ஆக்கிரமிப்பு செய்கின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அத்தோட்ட மக்கள் ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியின் லோகி தோட்டத்திற்கருகில் இன்று காலை 8.30 மணியளவில் வீதியை மறித்து தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதான வீதியின் ஓரத்திலுள்ள லோகி தோட்டத்திற்கு சொந்தமான காணியை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கம்பிவேலியை நாட்டிய நிலையில் அதனை உடைத்து எறிந்த தோட்டமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும் குறித்த நிலப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடையை அகற்றக்கோரியும்  தோட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் 100 ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதுடன் “எங்கள் நிலம் எங்களுகே சொந்தம்” ,  “ கடையை அகற்று”  போன்ற எதிர்ப்பு வாசகங்கள் ஏந்தியவண்ணம் இடம்பெற்ற ஆர்பாட்டத்தினால் நுவரெலியா அட்டன் பிரதான வீதி ஒரு  மணித்தியாலங்கள் வரை தடைப்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த லிந்துலை பொலிஸார், காணி அபகரிப்பு தொடர்பில் விசாரணையை முன்னெடுப்பதாக தெரிவித்ததையடுத்து ஆர்பாட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04