சர்­வ­தேச மெய்­வல்­லுநர் போட்­டி­களில் பதக்­கங்கள் வென்ற மற்றும் தேசிய மெய்­வல்­லுநர் போட்­டி­களில் தங்கப் பதக்கம் வென்ற வர்த்­தக நிறு­வ­னங்­களைச் சேர்ந்த வீர, வீராங்­க­னை­களை விருது வழங்கி கௌர­விப்­ப­தற்கு வர்த்­தக மெய்­வல்­லுநர் சங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. 

வர்த்­தக மெய்­வல்­லுநர் சங்­கத்தின் வரு­டாந்தப் பொதுக் கூட்­டமும் நிரு­வா­கிகள் தெரிவும் பொரளை ஒட்டர்ஸ் கழ­கத்தில் கடந்த வாரம் நடை­பெற்­றது. இந்தக் கூட்­டத்­தின்­போது விருது விழா­வுக்­கான யோசனை முன்­வைக்­கப்­பட்டு தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தாக வர்த்­தக மெய்­வல்­லுநர் சங்­கத்தின் பொதுச் செய­லாளர் டோர்­னாடோ ஜய­சுந்­தர தெரி­வித்தார்.

அத்­துடன் வர்த்­தக நிறு­வ­னங்­க­ளுக்கு இடையில் வீத ஓட்டப் போட்­டியை அடுத்த வருடம் பெப்­ர­வரி மாதத்தில் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் இப் போட்டி ஐந்து வயதுப் பிரி­வு­களில் நடத்­தப்­படும் எனவும் டோர்­னாடோ கூறினார்.

மேலும் அடுத்த வருடம் வர்த்­தக நிறு­வ­னங்­க­ளுக்கு இடை­யி­லான மெய்­வல்­லுநர் போட்­டி­களை கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கில் செப்­டெம்பர் 21, 22, 23ஆம் திக­தி­களில் நடத்­து­வ­தற்கு சங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

இவ் வருடம் நடை­பெற்ற 34ஆவது வரு­டாந்தப் பொதுக் கூட்­டத்தில் ஜன­சக்தி காப்­பு­றுதி நிறு­வ­னத்தைச் சேர்ந்த ப்ரசன்ன இந்­திக்க புதிய தலை­வ­ராக போட்­டி­யின்றித் தெரி­வானார். இவர் முன்னாள் உதவித் தலை­வ­ராவார்.

பொதுச் செய­லா­ள­ராக சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் நிறு­வ­னத்தைச் சேர்ந்த டோர்­னாடோ ஜய­சுந்­தர 6ஆவது தட­வை­யாக போட்­டி­யின்றி தெரி­வானார்.

பொரு­ளா­ள­ராக அட்டன் நெஷனல் வங்­கியைச் சேர்ந்த கே. சுந்­த­ர­ராஜன் ஏக­ம­ன­தாகத் தெரி­வானார். சிரேஷ்ட உதவித் தலை­வ­ராக பெசில் சில்வா (ஹொங் கொங் ஷங்காய் வங்கி), உதவித் தலை­வர்­க­ளாக ஹன்ச வித்­தா­ன­வாசம் (ஸ்ரீலங்கா ஏயார் லைன்ஸ்), நிஷான்த ரண­துங்க (கொமர்ஷல் லீசிங் அண்ட் பினான்ஸ் லிமிட்டெட்), மஹேஷ் குண­ரட்ன (நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி), வி.டி. லியனகே (கலம்போ டொக் யார்ட்). ஆகியோர் தெரிவாகினர்.

உதவிச் செயலாளர்: வாசனா பெர்னாண்டோ (அட்டன் நெஷனல் வங்கி).

உதவிப் பொருளாளர்: எல். ஜயவர்தன (சிலோன் பிஸ்கிட்ஸ்).