சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2 பொயிண்ட் ஓ படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பொலிவுட் நாயகன் அக்சய்குமார். எமி ஜேக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 2 பொயிண்ட் ஓ. இந்திய மதிப்பில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் முப்பரிமாண கோணத்தில் படமாக்கப்பட்டிருக்கும் இதற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஓடியோ வெளியீடு அண்மையில் டுபாயில் நடைபெற்றது. படத்தின் டீஸர் மற்றும் டிரைலரை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இப்படம் தற்போது ஏப்ரலில் வெளியாகும் என்ற அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இப்படம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என்கிறார்கள் திரையுலகினர்.

தகவல் : சென்னை அலுவலகம்