Male Menopause எனப்படுகின்ற ஆண்களுக்கான இனப்பெருக்கச் செயல்முடிவு!

Published By: Robert

03 Dec, 2017 | 11:40 AM
image

பெண்­க­ளுக்கும் ஆண்­க­ளுக்கும் உட­லியல் செயல்­பாட்டில் பல்­வேறு இயக்­கங்­க­ளுக்­காக பல­வி­த­மான ஏற்­பா­டு­களை இயற்கை வரப்­பி­ர­சா­த­மாக அளித்­துள்­ளது. அவற்றில் ஒன்று தான் ஆண்­க­ளுக்கும் பெண்­க­ளுக்­கு­மாக தனித்­த­னி­யாக இனப் பெருக்­கத்­திற்­காகச் சுரக்­கின்ற ஹோர்­மோன்கள். இந்த குறிப்­பிட்ட ஹோர்­மோன்­கள்தான் ஆண்­க­ளையும் பெண்­க­ளையும் அவர் களு­டைய தனித்­தன்­மை­க­ளு­டனும், விஷேட குணா­தி­ச­யங்­க­ளு­டனும் ஆண் என்றும் பெண் என்ற வேறு­பா­டு­க­ளு­டனும் முன்­னி­லைப்­ப­டுத்­து­கின்­றன. ஹோர்மோன் என்­பது பொது­வாக இரத்­தத்தில் இருக்­கின்ற உட்­சு­ரப்பி நீர் வகைகளாகும். இந்த ஹோர்­மோன்­களின் வேலைப்­பாடுகள் மனித உடலின் வெவ்­வேறு இயக்­கங்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிப்­ப­வை­யாக இருக்­கின்­றது. நல்ல ஆரோக்­கி­ய­மான ஒரு மனிதரின் உடலில் சுரக்கின்ற ஹோர்மோன் அதற்கு கொடுக்கப்பட்ட பணியை மிகச் சரியாகவே செய்திடும்.

பெண்­க­ளுக்­கான இன­வி­ருத்­திக்குத் தேவை­யான ஹோர்மோன் ஈஸ்ட்­ரோஜன் எனவும், இதுவே ஆண்­க­ளுக்­கா­னது டெஸ்­டோஸ்­டெரோன் எனவும் அழைக்­கப்­ப­டு­கின்­றன. ஆனாலும் ஒவ்­வொரு மனித உடம்­பிலும் இனப்­பெ­ருக்க ஹோர்­மோன்­க­ளான ஈஸ்ட்­ரோஜன், டெஸ்­டோஸ்­டெரோன் மற்றும் பிரா­ஜெஸ்­டரோன் ஆகி­யவை இருக்கும். அதே சமயம் அவற்றின் இருப்பு அள­வுகள் மட்டும் வெவ்­வேறு விகி­தா­சா­ரத்தில் இருக்கும். இந்த ஹோர்மோன்கள் அவற்­றிற்­கான தனித்­துவம் மிக்க வேலை­களை திறம்­படச் செய்து முடிக்­கின்­றன. டெஸ்­டோஸ்­டெரோன் ஆண்­க­ளுக்­கான இனப்­பெ­ருக்க ஹோர்­மோ­னாக விளங்­கு­கின்­றது.

மேல் மெனோபாஸ் அல்­லது ஆண்­க­ளுக்­கான இனப்­பெ­ருக்க செயல்­பாடு முடி­வ­டைதல்

ஹோர்மோன் மாற்­றங்­க­ளுக்கு பெண்கள் மட்­டுமே இலக்­கா­கின்­றார்கள் என்­ப­தல்­லாமல், ஆண்­க­ளுக்கும் இவ்­வி­தத்­தி­லான பிரச்­சி­னைகள் ஏற்­ப­டவே செய்­கின்­றன. மாத­வி­லக்­கிற்கு இறு­தி­யா­வ­தற்கு முன்பும் பின்பும், பெண்­க­ளுக்கு இருக்கும் உடல் நிலையைப் போலவே, சில வயது முதிர்ந்த ஆண்­களும் சில அறி­குறி களையும் பிரச்­சி­னை­க­ளையும் முன் வைக்­கின்­றார்கள் என சில மருத்துவர்கள் தெரி­விக்­கின்­றார்கள். இருப்பினும் மருத்­துவ உல­க­மா­னது இன்­னமும், “ஆண்­க­ளுக்கு ஒரு வரை­ய­றுக்­கப்­பட்ட, துல்­லி­ய­மாகக் கண்­ட­றி­யப்­பட்ட மெனோபாஸ் அல்­லது செயல்­பாட்டு நிறுத்தம் உள்­ளதா” என்­பது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்­டேதான் இருக்­கின்­றது. வயது மூப்­ப­டைந்த ஆண்கள் “மேல் மெனோபாஸ்” நிலையை எதிர் கொள்ளும் போது டெஸ்­டோஸ்­டெரோன் எனும் ஆண்­க­ளுக்குத் தேவை­யான ஹோர்­மோனின் சுரத்­தலைக் கூட்டச் செய்யும் போது, ஓர­ள­வுக்கு நிவா­ரணம் கிடைப்­ப­தாக ஆண்கள் தெரி­விக்கின்றனர் என்று மருத்­து­வர்கள் கூறுகின்றார்கள். எது எப்­ப­டி­யா­யினும், ஒரு குறிப்­பிட்ட வய­துக்கு மேற்­பட்ட ஆண்­களின் இன உற்­பத்தி திறன் ஆண்­க­ளுக்­கான ஹோர்மோன் ஆகிய டெஸ்ட்­டரோன் குறை­பாட்­டினால் பெரிதும் குறை­கின்­றது என்று கண்­ட­றியப்பட்­டுள்­ளது. இதனை அன்ட்­ரோபாஸ் என்று அழைக்­கின்­றார்கள். இந்த நிகழ்வு சர்க்­கரை நோயா­ளர்­க­ளி­டையே சற்று கூடு­த­லாக இருக்­கலாம். 

மேல் மெனோ­பா­ஸிற்­கான அறி­கு­றிகள்

மேல் மெனொபாஸ் நிலையை எதிர் கொள்ளும் சற்றே வய­தான ஆண்கள், உடல் சோர்வு, உடல் இய­லாமை, மன அழுத்தம் மற்றும் பாலின பிரச்­சி­னைகள் முத­லி­ய­வற்றை உணர்­வார்கள். பெண்­க­ளுக்கு இருப்­பதைப் போல, ஆண்­க­ளுக்­கான மேல் மெனோபாஸ் நிகழ்வில் இனப் பெருக்க செயல்­பா­டுகள் ஹோர்மோன் சுரக்­காத கார­ணத்­தினால் முற்­றி­லு­மாக உட­ன­டி­யாக நின்று போவ­தில்லை. ஆண்­களைப் பொறுத்­த­மட்டில் இது ஒரு மெது­வான நடை­மு­றை­யா­கவே இருக்கும். 

நோய்க்­கான சிகிச்சை

பாதிக்­கப்­பட்ட ஆண்­க­ளுக்கு டெஸ்­டோஸ்­டெரோன் அள­வினை உயர்த்­து­வ­தற்கு முயற்­சிகள் மேற்கொள்­ளலாம். நல்ல உடற்­ப­யிற்­சி­களை ஒவ்­வொரு நாளும் செய்து உடம்பின் ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்­தலாம். புகைப்­பி­டித்தல், மது­பானம் எடுத்துக் கொள்­ளுதல் ஆகி­ய­வற்றை முழு­வ­து­மாக தவிர்த்துக் கொள்­ளலாம். மருத்­து­வர்­களின் ஆலோ­சனைப் படி, முறை­யான பாலியல் ஈடு­பாடும் ஒரு உடற்­ப­யிற்சி என்­பதால் இதனை முற்­றி­லு­மாக தவிர்ப்­பதும் தவ­றாகும். சமச்சீர் உண­வு­களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு நடைப் பயிற்சியை மேற்கொள்ளலாம். இவற்றையெல்லாம் கடைப்பிடிக்கும் போது உங்களுக்கான தன்னம்பிக்கை குடும்ப வாழ்க்கையிலும் கூடுதலாக்கப் பெறும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.

A.A.ராமன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இதய பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பெண்களிடத்தில்...

2023-09-28 15:05:39
news-image

பெண்களுக்கு ஏற்படும் பிரத்தியேக சிறுநீர் கசிவு...

2023-09-27 15:30:10
news-image

இதயத்துடிப்பை சீராக வைத்துக் கொள்வதற்கான எளிய...

2023-09-26 17:14:05
news-image

உடற்பயிற்சியின் மூலம் வலிகளை குணப்படுத்துவோம் -...

2023-09-25 15:49:32
news-image

ஹலிடோசிஸ் எனும் வாய் துர்நாற்ற பாதிப்பிற்குரிய...

2023-09-25 12:36:36
news-image

மன அழுத்தத்தை குறைக்கும் டாக்கிங் தெரபி...

2023-09-23 15:38:51
news-image

கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

2023-09-22 13:05:56
news-image

பேறு காலத்தின் போது பெண்களுக்கு மார்பக...

2023-09-21 13:49:25
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு பாதிப்பிற்குரிய...

2023-09-20 14:01:29
news-image

இடியோபதிக் இன்ட்ராகிரானியல் ஹைப்பர்டென்ஷன் எனப்படும் மூளை...

2023-09-19 17:09:39
news-image

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-09-18 14:21:13
news-image

நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

2023-09-16 17:06:10